உலகம்

உக்ரைனில் இருந்து அகதிகளாக வரும் மக்களை வரவேற்க தயார்: அமெரிக்கா

DIN


உக்ரைனில் இருந்து அகதிகளாக வரும் மக்களை வரவேற்க தயார் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷிய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அந்தப் பகுதிகளில் கூச்சலும் குழப்பமும் நிலவி வருகிறது. 

ரஷிய தாக்குதல் அச்சத்தால் கீவ் நகரைவிட்டு அவசரமாக வெளியேற ஏராளமானவா்கள் ஒரே நேரத்தில் முயன்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், உக்ரைன் நாட்டில் இருந்து 18 முதல் 60 வயதுடைய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து அகதிகளாக வரும் மக்களை வரவேற்க தயார் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

செர்னோபில்லில் உள்ள அணுமின் நிலையத்தை ரஷிய படையினர் கைப்பற்றியதாக உக்ரைன் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷிய படைகள் தாக்குதல் மிக மோசமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதாக ஐ.நா மனித உரிமை ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT