உலகம்

'போர் வேண்டாம்; அமைதி வேண்டும்' - வீதிகளில் இறங்கி ரஷிய மக்கள் போராட்டம்

DIN

'உக்ரைனுடன் போர் வேண்டாம்' என ஆயிரக்கணக்கான ரஷிய மக்கள் சாலைகளில், தெருக்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது நேற்று போர் தொடுக்கத் தொடங்கியது. ரஷியா தாக்குதலில் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு ஐ.நா. அமைப்பு மற்றும் பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, போருக்கு எதிராக ரஷியாவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ரஷியாவில் தலைநகர் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

'போர் வேண்டாம்', 'உக்ரேனியர்களுடன் ஒற்றுமை பாராட்டுவோம்', 'உலக அமைதி வேண்டும்' என்று பதாகை மற்றும் கோஷங்களுடன் போரிட்டு வருகின்றனர். போருக்கு எதிரான ரஷிய மக்களின் போராட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT