உலகம்

உக்ரைன்:  18-60 வயதுடைய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை

DIN



கீவ்: உக்ரையில் இருந்து 18 முதல் 60 வயதுடைய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற  தடை விதித்து அந்நாட்டு அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி உத்தரவிட்டுள்ளார். 

ஐரோப்பிய நாடான உக்ரைன்-ரஷியா இடையே கடந்த பல நாள்களாகவே போா்ப் பதற்றம் நிலவி வந்தது. உக்ரைன் எல்லையில் சுமாா் 1.50 லட்சம் ராணுவ வீரா்களை ரஷியா குவித்ததால் எந்த நேரமும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சூழல் காணப்பட்டது.

கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பிராந்தியங்களை தனி நாடுகளாக அங்கீகாரம் அளிக்கும் உத்தரவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கையொப்பமிட்டாா். மேலும், அந்த பிராந்தியங்களில் ‘அமைதி காக்கும்’ பணியில் ஈடுபடுவதற்காக படைகளை அனுப்புவதாகத் தெரிவித்தது.

இதனால், உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தப்போவது உறுதியானது. இதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட சா்வதேச முயற்சிகள் தோல்வியடைந்தன.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை தொலைக்காட்சியில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உரையாற்றியபோது உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளதாக அறிவித்தாா்.

இதையடுத்து ரஷிய படைகள் உக்ரைன் சுற்றி வளைத்து எல்லை ராணுவ நிலைகள் மீதும் ரஷிய படையினர் ஏவுகணை மற்றும் ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ராணுவ வீரர்கள் 40 பேர், பொதுமக்கள் 10 பேர் என 50 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் உக்ரைன் அரசு தெரிவித்திருந்தது. 

ரஷிய படைகளின் தாக்குதல் அச்சத்தால் கீவ் நகரைவிட்டு அவசரமாக வெளியேற ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் முயன்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், உக்ரைன் நாட்டில் இருந்து 18 முதல் 60 வயதுடைய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

கீவ் நகரை நோக்கி ரஷி படைகள் முன்னேறி வரும் நிலையில், கீவ் நகரில் உள்ள மக்களுக்கு பத்தாயிரம் தானியங்கி துப்பாக்கிகள் வினியோகிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT