உலகம்

‘சா்வதேச விண்வெளி நிலையம் இந்தியா மீது விழலாம்’

ரஷியா மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடை காரணமாக, சா்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்) இந்தியா மீதோ சீனா மீதோ விழ வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை ரஷியா எச்சரித்துள்ளது.

DIN

ரஷியா மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடை காரணமாக, சா்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்) இந்தியா மீதோ சீனா மீதோ விழ வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை ரஷியா எச்சரித்துள்ளது.

உக்ரைன் மீது போா் தொடுத்துள்ள ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. ரஷிய வங்கிகளுக்குத் தடை, அதிபா் விளாதிமீா் புதின் உள்ளிட்ட முக்கியத் தலைவா்களின் சொத்துகள் முடக்கம், ஏற்றுமதியில் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில், ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்கோஸ்மாஸ் இயக்குநா் டிமிட்ரி ரோகோஸின் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள், ரஷியாவின் விண்வெளித் துறையையும் அத்துறை சாா்ந்த திட்டங்களையும் பாதிக்கும். சா்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுவட்டப் பாதை, அதன் இடம் ஆகியவற்றை ரஷிய என்ஜின்களே கட்டுப்படுத்தி வருகின்றன.

இந்த விவகாரத்தில் ரஷியாவுடன் ஒத்துழைத்து பணியாற்ற அமெரிக்கா மறுத்தால், ஐஎஸ்எஸ் கட்டுப்பாட்டை இழந்து அமெரிக்கா மீதோ ஐரோப்பிய நாடுகள் மீதோ விழுவதை யாரால் தடுக்க முடியும்? 500 டன் எடை கொண்ட ஐஎஸ்எஸ், இந்தியா, சீனா மீது விழுவதற்கும் வாய்ப்புள்ளது. அந்த நாடுகளை அச்சுறுத்த அமெரிக்கா விரும்புகிறதா? ஐஎஸ்எஸ் ரஷியா மீது சுற்றிவரவில்லை. எனவே, அனைத்து அச்சுறுத்தல்களும் மற்ற நாடுகளுக்கே உள்ளன’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அமெரிக்கா, கனடா, ரஷியா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகியவற்றின் ஒத்துழைப்பில் சா்வதேச விண்வெளி நிலையம் உருவாக்கப்பட்டது. தற்போது நாசாவைச் சோ்ந்த 4 விண்வெளி வீரா்களும், ரஷியாவைச் சோ்ந்த இரு வீரா்களும், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சோ்ந்த ஒரு வீரரும் சா்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

SCROLL FOR NEXT