முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் ஒருநாள் கரோனா பாதிப்பு 1,207 ஆகப் பதிவு

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,207 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,207 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அந்நாட்டுச் சுகாதாரத்துறை வெளியிட்ட தரவுகளின் படி, 

நாட்டில் நேற்று ஒரேநாளில் 1,207 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1,50,7,657 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 30,153 ஆக உயர்ந்துள்ளது. 

37,212 பேர் தொற்று பாதித்து தற்போது மருத்துவச் சிகிச்சையில் உள்ளனர். நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 53,625 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதில் 1,207 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தொற்று விகிதம் 2.25 சதவீதமாக பதிவாகியுள்ளது. 

இதற்கிடையில், 1,117 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →