உலகம்

இத்தாலி வான்வெளியில் ரஷிய விமானங்களுக்குத் தடை

DIN

இத்தாலி வான்வெளியில் ரஷிய நாட்டைச் சேர்ந்த விமானங்கள் பறக்க தடை விதித்தது அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கெனவே பெல்ஜியம், டென்மார்க், அயர்லாந்து ஆகிய நாடுகள் ரஷிய விமானங்கள் பறப்பதற்கு வான்வழிக்குத் தடை விதித்துள்ள நிலையில், இத்தாலி அரசும் தடை விதித்துள்ளது.

உக்ரைன் - ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான போரால் மற்ற நாடுகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பெரும்பாலான நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன. 

எனினும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் தொடர்ந்து போரிட்டு வருகின்றனர். இதில் ஏராளமான அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

உக்ரைனில் முக்கியமான இடங்களை ரஷிய ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளன. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.

இதனிடையே ரஷியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் விமானங்கள் தங்கள் வான்வழியில் பறக்க இத்தாலி அரசு தடை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT