ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் (கோப்புப் படம்) 
உலகம்

அணு ஆயுத தடுப்புப் படைக்கு புதின் விடுத்த உத்தரவு... அச்சத்தில் உக்ரைன் மக்கள்

ரஷியாவின் அணு ஆயுத தடுப்புப் படையினர் தயார் நிலையில் இருக்க அதிபர் விளாதிமீர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

DIN

ரஷியாவின் அணு ஆயுத தடுப்புப் படையினர் தயார் நிலையில் இருக்க அதிபர் விளாதிமீர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைனுடன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷிய அணு ஆயுத தடுப்புப் படைக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

உக்ரைனின் வடக்குப் பகுதிகள் முழுவதுமாக ரஷிய ராணுவத்தின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், தலைநகர் கீவ், கார்கிவ் உள்பட பல முக்கிய நகரங்களை ரஷிய ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

கட்ந்த வியாழக்கிழமையிலிருந்து போர் நடைபெற்று வருகிறது. இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஏராளமான மக்கள் பதுங்கு குழிகளிலும், சுரங்கங்களிலும் தங்கியுள்ளனர். 

இந்நிலையில், வடக்குப் பகுதிகளில் மேலும் முன்னேறி வருவதற்கு ரஷிய ராணுவம் முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இதனால், அணு ஆயுத தடுப்புப் படையினர் தயார் நிலையில் இருக்க ரஷிய அதிபர் புதின் அறிவுறுத்தியுள்ளார். 

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அணு ஆயுத தடுப்புப் படையினர் தயார் நிலையில் இருக்க புதின் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஆக. 12-ல் தே.ஜ.கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு!

கருப்பு புறா... பிரியங்கா மோகன்!

சத்தீஸ்கரில்.. ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!

SCROLL FOR NEXT