உலகம்

ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புதல்

ரஷியாவுடன் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியாவுடன் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா அழைப்பு விடுத்திருந்தபோது உக்ரைன் மறுப்புத் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. இதனை ரஷிய பத்திரிகைகள் உறுதி செய்துள்ளன. 

உக்ரைனில் ரஷியாவின் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமான நகரங்களை ரஷியப் படைகள் கைப்பற்றியுள்ளன. இதனால் அந்த நகரங்களிலுள்ள மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் அடைந்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை முதல் 4வதுநாளாக போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷியாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தற்போது முன்வந்துள்ளது. பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த நிபந்தனை விதித்துள்ளதாகவும் ரஷிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதனை ரஷியத் தரப்பு அரசுப் பிரதிநிதி விளாதிமிர் மெடின்ஸ்கியும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதியதொரு அத்தியாயம்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT