உக்ரைன் அதிபர் 
உலகம்

ரஷியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்...ஆனால், நிபந்தனை விதித்த உக்ரைன்

பெலாரஸ் கோமல் நகரில் உக்ரைன் அதிகாரிகளை சந்திக்க தயார் என ரஷியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

பெலாரஸில் பேச்சுவார்த்தைக்கு ரஷியா அழைப்பு விடுத்திருந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி அதை நிராகரித்துள்ளார். பெலாரஸ் அரசும் ரஷியா படையெடுக்க உதவியுள்ளதால் அங்கு பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என அவர் கூறியுள்ளார்.

ஆனால், மற்ற இடங்களில் பேச்சுவார்த்தை நடக்கும் பட்சத்தில் அதில் கலந்து கொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை என ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். வார்சா, பிராட்டிஸ்லாவா, புடாபெஸ்ட், இஸ்தான்புல், பாகு ஆகிய இடங்களை பேச்சுவார்த்தைக்காக முன்மொழிந்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெலாரஸ் கோமல் நகரில் உக்ரைன் அதிகாரிகளை சந்திக்க தயார் என ரஷியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலக போருக்கு பிறகு நடைபெறும் மிக பெரிய தாக்குதலாக உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு கருதப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கிவ்வை நோக்கி ரஷியா ராணுவம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக உக்ரைன் பாதுகாப்பு படை பதிலடி அளித்துவருகிறது.

போர் நான்காம் நாளை எட்டியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 200 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

நிலம், வான், கடல் என உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துவரும் நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முக்கிய நகரங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்பாகவே, பிரிட்டன், அமெரிக்க, ஜப்பான் போன்ற நாடுகள், தங்களின் தூதரக அலுவலர்களை உக்ரைனிலிருந்து வெளியேற்றியது. போர் சூழம் அபாயம் இருப்பதால் மக்கள் வெளியேறும்படி வலியுறுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

SCROLL FOR NEXT