உலகம்

உக்ரைன் போர்: கார்கீவ் நகரில் இன்று 11 பேர் பலி

DIN

உக்ரைனில் போர்ச்சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், கார்கீவ் நகரில் வெடிகுண்டு தாக்குதல் மூலம் 11 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைன் நகரின் தென்மேற்கு பகுதிகளில் ஞாயிற்றுக் கிழமை முதல் ரஷிய ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் மீதும், குடியிருப்புகளின் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாக டெலிகிராம் வாயிலாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். 

ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அவசர உதவியை கூட அழைக்க இயலவில்லை. இதனால் 11 பேர் உயிரிழந்தனர். 12க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 

கீவ் நகரின் விமான நிலையத்தில் ரஷிய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைனில் ஏற்பட்டுள்ள போரால், அந்நாட்டிலிருந்து இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT