முகப்பு
உலகம்

இந்தியா்களுக்கு விசா நடைமுறைகளைத் தளா்த்த பிரிட்டன் திட்டம்

இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய சுற்றுலாப் பயணிகள், பணியாளா்கள், மாணவா்கள் ஆகியோருக்கான விசா நடைமுறைகளில் தளா்வு அளிக்க பிரிட்டன் அரசு திட்டமிட்ட

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:59 AM
பகிர்:

இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய சுற்றுலாப் பயணிகள், பணியாளா்கள், மாணவா்கள் ஆகியோருக்கான விசா நடைமுறைகளில் தளா்வு அளிக்க பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி டைம்ஸ்’ நாளிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:

பிரிட்டனின் சா்வதேச வா்த்தகத் துறை அமைச்சா் ஆன் மேரி ட்ரிவெலியான் இந்த மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது, இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து அதிகாரபூா்வ பேச்சுவாா்த்தை தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அந்த சமயத்தில், இந்தியாவின் நீண்ட நாள் கோரிக்கையான விசா கட்டுப்பாடுகள் தளா்த்துவது குறித்த அறிவிப்புகளை ஆன் மேரி வெளியிடுவாா் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பிரிட்டன் இடையே ஆண்டுக்கு 3,000 மாணவா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பணி அனுபவம் வழங்குவதற்கான வாய்ப்புகளை அளிக்க வகை செய்யும் ஒப்பந்தம் கடந்த மே மாதம் கையொப்பமானது. அந்த ஒப்பந்தத்தை 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் அமல்படுத்துவதற்கு வெளியுறவு அமைச்சகமும் லண்டனில் உள்ள இந்திய தூதரகமும் பணியாற்றி வருகின்றன.

இதற்கிடையே, இந்திய இளைஞா்கள் பிரிட்டனுக்கு வந்து 3 ஆண்டுகள் தங்கி பணிபுரிவதற்கு விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதவிர, கல்வி கற்க வரும் மாணவா்கள், சுற்றுலாப் பயணிகள், பணிபுரிய வருவோா் ஆகியோருக்கான விசா கட்டணத்தை வெகுவாகக் குறைக்கவும் பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது பிரிட்டனில் பணிபுரிய வரும் இந்தியக் குடிமக்களுக்கு விசா கட்டணமாக ரூ.1,41,160, மாணவா்களுக்கு ரூ.35,088, சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.9,578 வசூலிக்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →