அமெரிக்காவில் தினசரி கரோனா பாதிப்பு 7 லட்சத்தைத் கடந்தது
உலகிலேயே அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்திலான தினசரி கரோனா பாதிப்பு 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
உலகிலேயே அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்திலான தினசரி கரோனா பாதிப்பு 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்களின்படி, புதிய வகை கரோனாவால் அமெரிக்கா்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் வியாழக்கிழமை காலை வரையில் தினசரி தொற்று எண்ணிக்கை 7,04,661 ஆக உயர்ந்துள்ளது. அதே காலத்தில் 1,802 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிக்க | இந்தியாவுக்கு ஹாங்காங் பயணத் தடை
Advertisement
அமெரிக்காவின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை வியாழக்கிழமை 5,88,05,186-ஆக உள்ளது. இதுவரை 8,53,612 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்ட 4,19,99,896 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 1,59,51,678 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 20,938 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.