முகப்பு
உலகம்

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து: 9 குழந்தைகள் உள்பட 19 பேர் பலி

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 19 பேர் பலியானார்கள். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:05 AM
பகிர்:

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 19 பேர் பலியானார்கள். 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 19 மாடி குடியிருப்பில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். 
எனினும் இந்த சம்பவத்தில் 9 குழந்தைகள் உள்பட 19 பேர் பலியானார்கள். 32 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தீ விபத்திற்குள்ளான அடுக்குமாடி கட்டடம்

நவீன காலங்களில் நியூயார்க் நகரில் நாங்கள் கண்ட மிக மோசமான தீ விபத்துகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நியூயார்க் நகர மேயர் தெரிவித்தார். முன்னதாக கடந்த புதன்கிழமை பிலடெல்பியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →