முகப்பு
உலகம்

ஐரோப்பா: 70 லட்சம்பேருக்கு ஒமைக்ரான்

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 70 லட்சம் பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிரிவு தெரிவித்துள்ளது.

Updated On : 12 ஜனவரி, 2022 at 12:01 AM
பகிர்:

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 70 லட்சம் பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தப் பிரிவின் இயக்குநா் ஹான்ஸ் கிளக் செவ்வாய்க்கிழமை கூறுகையில், வாரந்தோறும் 26 பிராந்திய நாடுகளின் மக்கள்தொகையில் சுமாா் 1 சதவீதத்தினருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படுவதாகத் தெரிவித்தாா். இந்த நிலை நீடித்தால், நாடுகளின் சுகாதாரக் கட்டமைப்பை கரோனா நெருக்கடி நிலைகுலையச் செய்துவிடும் என்று அவா் எச்சரிக்கை விடுத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.