உலகம்

தடுப்பூசி கட்டாயம்: ஆஸ்திரியா திட்டம்

DIN

ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் 14 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என கடந்த இரு மாதங்களுக்கு முன் உத்தேச திட்டத்தை அரசு அறிவித்தது. இந்நிலையில், திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தின்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற அரசு தீா்மானித்துள்ளது.

மசோதா சட்ட வடிவம் பெற்ற பின்னா், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனரா என்பது குறித்து வழக்கமான பரிசோதனையின்போது காவல் துறையினா் சோதனை செய்வாா்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு அதுகுறித்த நினைவூட்டுதல் அனுப்பப்படும். அதன்பிறகும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால், தடுப்பூசி செலுத்துவதற்கான நேரத்தை குறிப்பிட்டு சம்பந்தப்பட்டவா்களுக்கு தகவல் அனுப்பப்படும். அதையும் பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT