முகப்பு
உலகம்

ஜெர்மனியில் ஒரேநாளில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. 

ஜெர்மனியில் கரோனா பரவல் எதிர்பாராத அளவுக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராபர்ட் கோச் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,12,323 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 239 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.