உலகம்

பிரிட்டனில் தளரும் கட்டுப்பாடுகள்: இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை!

DIN

கரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் அடுத்தவாரம் முதல் பிரிட்டனில் முகக்கவசம் அணிய வேண்டாம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பிரிட்டனில் தினசரி தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்து வருகிற நிலையில், பிரிட்டன் மக்கள் பிளான் பி என்கிற கரோனா விதிமுறைகளை சரியாகப் பின்பற்றியதால் பிளான் ஏ-க்குத் திரும்பலாம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் பேசியபோது ’பிரிட்டனில் கடந்த வாரத்தை ஒப்பிடும்போது தினசரி கரோனா பாதிப்பு 21 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், பழைய கட்டுப்பாடுகளை நீக்கிக்கொள்ளலாம்’ என்றார்.

அதன்படி , 

*  இன்று முதல் பிரிட்டனில் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை.

* பயணத்தின் போது கரோனா பாஸ்போர்ட் எனப்படும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்களை காட்ட வேண்டாம். பெரிய இடங்களுக்குச் செல்லும்போது தேவைப்பட்டால் காட்டலாம்.

* பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்வது அவரவர் விருப்பம். அணியாதவர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது.

* வீட்டிலிருந்து பணி செய்து கொண்டிருந்தவர்கள் இனி அலுவலகம் சென்று வேலை செய்யலாம்.

* மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 5 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதிலிருந்து விலக்கில்லை. இருப்பினும் வரும் மார்ச் மாதம் அந்த கட்டுப்பாடும் நீக்கப்படும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணிவதைத் தவிர்த்து மற்ற அனைத்துக் கட்டுப்பாடுகளையும் அடுத்த வாரத்திலிருந்து தளர்த்திக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT