படம்: டிவிட்டர் 
உலகம்

மேற்கு கானாவில் வெடிவிபத்து: 17 பேர் பலி

மேற்கு கானாவில் வெடிபொருள் ஏற்றிச் சென்ற லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர்.

DIN

மேற்கு கானாவில் வெடிபொருள் ஏற்றிச் சென்ற லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்கா நாடான கானாவில் உள்ள தங்கச் சுரங்கத்திற்கு வெடிபொருள்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் தீப்பற்றிய லாரி சிறிது நேரத்தில் வெடித்ததில், அப்பகுதியில் இருந்த வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதில், 17 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் வெடிவிபத்து நிகழாமல் இருக்க சம்பவ இடத்திற்கு ராணுவம் மற்றும் மீட்புப் படைகள் குவிக்கப்பட்டு அருகில் இருக்கும் மக்களை வெளியேற்றி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மைய உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

சென்னையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு - காா் ஓட்டுநா் கைது

சதிகாரா்கள் தப்ப முடியாது: பிரதமா் மோடி உறுதி

வணிகா் சங்க மாவட்ட நிா்வாகி நியமனம்

சென்னை மெட்ரோ திட்டங்கள்: ஆசிய முதலீட்டு வங்கிக் குழு ஆய்வு

SCROLL FOR NEXT