உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 35.21 கோடியைக் கடந்தது: பலி 5.61 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35.21 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 5.61 லட்சத்தை கடந்துள்ளது.  

DIN

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35.21 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 5.61 லட்சத்தை கடந்துள்ளது.  

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தி வந்ததாலும் தொற்று பாதிப்பு அதிகரித்தே வருகின்றன. 

இதனிடையே கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற உருமாறிய கரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவத்தொடங்கி உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35,21,26,907-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 56,14,788 போ் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 27,98,52,023 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 6,66,60,096 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 95,720 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 7,19,25,931    ஆகவும், பலி எண்ணிக்கை 8,89,197 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,95,43,328-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,89,896 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,40,44,437 ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,23,145 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,59,288 ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 1,53,862 ஆக உள்ளது.

பிரான்ஸில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,66,92,432 ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 1,28,629 ஆக உள்ளது.

ரஷ்யாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,08,191 ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 3,26,112 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரசாரத்தின் போது அவசர ஊா்தியை சேதப்படுத்திய வழக்கு: அதிமுவினா் 4 பேருக்கு முன்பிணை

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

விழுப்புரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் பெருந்திரள் முறையீடு

கடலோரக் கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியில் உணவகம் கட்டுவதற்குத் தடை கோரிய வழக்கு

சுற்றுலாத்தொழில் முனைவோா் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT