முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு; ராணுவத்தினர் 10 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவத்தினர் 10 பேர் பலியாகினர்.

Updated On : 28 ஜனவரி, 2022 at 1:18 PM
பகிர்:

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவத்தினர் 10 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த கெஹ் மாவட்டத்திலுள்ள எல்லைப் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்நாட்டின் ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து ஐஎஸ்பிஆர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜன.26 ஆம் தேதி அதிகாலை சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராணுவத் தரப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

மேலும், பயங்கரவாதிகள் தரப்பில் ஒரு உயிரிழப்பும் , சிலருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பன்னு மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு ராணுவ வீரர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.