உலகம்

இலங்கை அதிபராகிறார் நாடாளுமன்ற அவைத் தலைவர்?

DIN


இலங்கை அதிபராக இருக்கும் கோத்தபய ராஜபட்ச பதவி விலகினால், அந்நாட்டு அரசியல் அமைப்பு விதிகளின்படி, நாடாளுமன்ற அவைத் தலைவர் தற்காலிக அதிபராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்திருக்கும் நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று  நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் வலியுறுத்தியுள்ளனர்.

அது மட்டுமல்லாமல், இலங்கையில், அனைத்துக் கட்சி அரசை அமைக்கவும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்படி, அதிபர் கோத்தபய தனது பதவியை விடடு விலகினால், அந்நாட்டு அரசியலமைப்பு விதிகளின்படி, நாடாளுமன்ற அவைத் தலைவர் அபேவர்தன அதிபராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச ராணுவ முகாமில் பலத்த பாதுகாப்புடன் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT