முகப்பு
உலகம்

தப்பியோடிய அதிபர்: பதவி விலகுகிறாரா இலங்கை பிரதமர்?

இலங்கையில் மக்கள் புரட்சியை வெடித்ததையடுத்து அதிபர் கோத்தபய ராஜபட்ச தப்பியோடிய நிலையில் நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தைக் கூட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 9 ஜூலை, 2022 at 7:20 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:15 PM

இலங்கையில் மக்கள் புரட்சியை வெடித்ததையடுத்து அதிபர் கோத்தபய ராஜபட்ச தப்பியோடிய நிலையில் நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தைக் கூட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் மக்கள் தங்களது அத்தியாவசிய சேவையை பெறுவதற்கு கூட மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவைகளால் நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. 

இந்நிலையில் சனிக்கிழமை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபட்ச கொழும்புவில் இருந்த கப்பலில் தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டின் நாடாளுமன்ற அவசரக் கூட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேரவைத் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளார். 

அனைத்து தரப்பினரும் இணைந்து நிலைமையை சரிசெய்யவும் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை நிராகரித்துள்ள எதிர்க்கட்சிகள் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.