உலகம்

இலங்கை போராட்டம்: இது எங்களது எதிர்காலத்திற்காக, போராட்டக்காரர்களுக்கு இலங்கை வீரர் ஆதரவு

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை ஆதரித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா கருத்து தெரிவித்துள்ளார்.

DIN

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை ஆதரித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா கருத்து தெரிவித்துள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கையில் மக்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபட்ச விலகியதை அடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக்கோரி கடந்த சில மாதங்களாகவே எதிர்க்கட்சியினர், பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (ஜூலை 9) போராட்டக்காரர்கள் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையைக் கைப்பற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், இலங்கையில் போராடி வரும் போராட்டக்காரர்களை ஆதரித்து விடியோ ஒன்றினை இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா பதிவிட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. 

அந்த விடியோவில் இருப்பதாவது: “ மக்கள் தங்களது கைகளில் இலங்கையின் தேசியக் கொடியினை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கூட்டத்தில் அனைவரும் ஒருவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கின்றனர்” இவ்வாறாக அந்த விடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த விடியோவினை வெளியிட்ட சங்ககாரா, இது எங்களின் எதிர்காலத்திற்கான போராட்டம் எனத் தலைப்பிட்டுள்ளார்.

சங்ககாரவைப் போலவே இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவும் போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT