இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து, லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை மேலும் ரூ.50 ஆக அதிகரிக்க உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகையை அடுத்து எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை சுமார் ரூ.200 அதிகரிக்கப்பட வேண்டிய சூழ்நிலையில், மக்கள் படும் இன்னல்களால் ரூ.50 மட்டும் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | அதிபர் பதவியில் இருந்து விலகுகிறார் கோத்தபய ராஜபட்ச?
மேலும், அடுத்த இரண்டு நாள்களுக்குள் கொழும்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள 140 இடங்களில் 1,40,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.