உலகம்

அதிபர் பதவியில் இருந்து விலகுகிறார் கோத்தபய ராஜபட்ச? 

DIN


இலங்கை அதிபர் கோத்பய ராஜபட்ச பதவியில் இருந்து விலகுவதாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுதொடர்பாக அதிபர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சமையல் எரிவாயு கப்பல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இலங்கைக்கு வந்தவுடன் எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் 3740 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவுடன் இரண்டாவது கப்பல் நாளை திங்கள்கிழமை கொழுப்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது. 

முதலாவது சமையல் எரிவாயு கப்பல் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு வந்தடைந்தது.

3200 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவுடன் மூன்றாவது கப்பல் வரும் 15 ஆம் தேதி இலங்கை வந்தடையவுள்ளது. ஜூலை மாதத்திற்காக சுமார் 33 ஆயிரம் மெட்ரிக் டன் எரிவாயுவிற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

செவ்வாய்க்கிழமை(ஜூலை 12) முதல் எரிவாயு விநியோகம் செய்வதற்கான முன்னெடுப்பு நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும், ஜூலை மாதத்திற்குள் சமையல் எரிவாயு நெருக்கடி முடிவுக்கு வரும் என்று லிட்ரோ நிறுவனம் அதிபர் கோத்தய ராஜபட்சவிடம் தெரிவித்துள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், வரும் 13 ஆம் தேதி தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக கோத்தபய ராஜபட்ச நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கையில் சனிக்கிழமை அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக்கோரி மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதிபர் பதவியில் இருந்து கோத்தபய, பிரதமர் பதவியில் இருந்து ரணிலும் பதவி விலகினால், இடைக்கால அதிபராக நாடாளுமன்ற அவைத் தலைவர் இடைக்கால அதிபராக  பொறுப்பேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT