உலகம்

ஜூலை 9ஆம் நாள் போராட்டம் பொது மக்களின் நாள்: சனத் ஜெயசூர்யா

இலங்கைப் பொருளாதார பிரச்சினைக்காக அந்நாட்டு மக்கள் ஜூலை 9ஆம் நாள் நடத்திய போராட்டத்தைக் குறித்து முன்னாள் இலங்கை வீரர் கருத்துத் தெரிவித்துள்ளார். 

DIN

இலங்கைப் பொருளாதார பிரச்சினைக்காக அந்நாட்டு மக்கள் ஜூலை 9ஆம் நாள் நடத்திய போராட்டத்தைக் குறித்து முன்னாள் இலங்கை வீரர் கருத்துத் தெரிவித்துள்ளார். 

கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கையில் மக்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபட்ச விலகியதை அடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக்கோரி கடந்த சில மாதங்களாகவே எதிர்க்கட்சியினர், பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜூலை 9ஆம் நாள் போராட்டக்காரர்கள் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையைக் கைப்பற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தைக் குறித்து முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா கூறியதாவது:

நானும் போராட்டகாரர்களுடன் கலந்துக் கொண்டேன். இதற்கு முந்தைய போராட்டத்திலும் கலந்துக்கொண்டேன். இந்தப் போராட்டத்திற்கு முதல் நாளில் இருந்தே நான் ஆதரவு தெரிவித்து வருகிறேன். நானும் கடந்த 3 மாதமாக போராடி வருகிறேன். ஜூலை 9ஆம் நாள் போராட்டம் பொதுமக்களின் நாள். 

அவர்கள் சொல்கிறார்களே தவிர அதிகாரப்பூர்வமாக இன்னும் ராஜிநாமா செய்யவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டதால் நான் அரசியலில் கலந்துக்கொள்வேன் என்று அர்த்தமில்லை. நான் அரசியலில் சேரமாட்டேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமை: அமைச்சர் எ.வ.வேலு

சிவப்பு கம்பள வரவேற்பு... பிரணிதா!

மிடில் ஆர்டரில் கவனம் தேவை, இந்தியாவின் சவாலுக்குத் தயார்: பாகிஸ்தான் கேப்டன்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

21 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT