உலகம்

இலங்கை அதிபர் பதவியை ராஜிநாமா செய்தார் கோத்தபய ராஜபட்ச!

DIN


இலங்கை அதிபர் பதவியை ராஜிநாமா செய்தார் கோத்தபய ராஜபட்ச.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வரும் நிலையில், அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

கடந்த சனிக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்களும், பல்கலைக்கழக மாணவா்களும், எதிா்க்கட்சியினா் உள்பட பல்வேறு அமைப்பினரும் திரண்டு வந்து, தலைநகா் கொழும்பில் உள்ள அதிபா் மாளிகையைக் கைப்பற்றினா். அதற்கு முன்னதாகவே அதிபா் கோத்தபய ராஜபட்ச அங்கிருந்து வெளியேறிவிட்டாா். அவா் எங்கே சென்றாா் என்பது குறித்து தெளிவான தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், இலங்கை அதிபர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார் கோத்தபய ராஜபட்ச.

ராஜிநாமா குறித்து பிரதமர் ரணிலுக்கு அதிகாரப்பூர்வமாக கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதிபா் கோத்தபய ராஜபட்ச ராஜிநாமாவை அடுத்து அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்படலாம் என்றும், இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட்டால் அதன் அதிபராக நாடாளுமன்ற அவைத் தலைவா் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT