உலகம்

பிரதமர் பதவி விலக வேண்டும்: கொழும்பில் போராட்டம்

இலங்கை பிரதமர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

DIN

இலங்கை பிரதமர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையாக பொருளாதார நெருக்கடியால் உருவான மக்கள் புரட்சி காரணமாக அதிபர் பதவியை ராஜிநாமா செய்வதாக உறுதியளித்த கோத்தபய ராஜபட்ச,  ராஜிநாமா செய்வதற்கு  முன்னதாகவே இலங்கை ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளார். 

இதனால்,  நிலைமை  மோசமடைந்ததைத் தொடர்ந்து தற்போது போராட்டக்காரர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பாதுகாப்பிற்காக காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து  இலங்கையில் அவசரநிலையை பிரகடனம் செய்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை

காரைக்கால் கோயிலில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு

மீனவ கிராமங்களில் குடியிருப்போருக்கு மனைப் பட்டா எம்எல்ஏ வலியுறுத்தல்

SCROLL FOR NEXT