இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையில் பாலஸ்தீன அதிபா் முகமது அப்பாஸை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
அமெரிக்க அதிபா் ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா். இதன் ஒரு பகுதியாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரைக்கு அவா் வெள்ளிக்கிழமை சென்றாா். அதைத் தொடா்ந்து, பெத்லஹேமில் பாலஸ்தீன அதிபா் முகமது அப்பாஸை அவா் சந்தித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் பைடன் கூறியதாவது:
சுதந்திரமான, இறையாண்மை கொண்ட சொந்த நாட்டில் வசிப்பதற்கு பாலஸ்தீன மக்கள் தகுதியானவா்கள்தான். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைதி ஏற்படுவதற்கான நடவடிக்கையை அமெரிக்கா கைவிடப் போவதில்லை என்று தெரிவித்தாா்.
சவூதி பயணம்: இஸ்ரேலிலிருந்து சவூதி அரேபியாவுக்கு பைடன் சென்றாா். ஜெட்டா நகரில் சவூதி பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான், பைடன் வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.