உலகம்

தொடரும் நெருக்கடி: கோத்தபயவுக்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு?

DIN

முன்னாள் இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச சிங்கப்பூரில் இருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, அதிபா் பதவியில் இருந்து ஜூலை 13-ஆம் தேதி விலக உள்ளதாக கோத்தபய ராஜபட்ச அறிவித்திருந்தாா். ஆனால், பதவியை ராஜிநாமா செய்வது தொடா்பாக எதுவும் தெரிவிக்காமல், விமானப் படை விமானம் மூலம் மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றாா். பின், அங்கிருந்து கடந்த ஜூலை 14 ஆம் தேதி விமானம் மூலம் சிங்கப்பூா் சென்றாா்.

அவா் தனிப்பட்ட முறையில் வந்திருப்பதாகவும், புகலிடம் எதுவும் அளிக்கவில்லை எனவும் சிங்கப்பூா் அரசு தெரிவித்திருந்தது. அதன்பின் கோத்தபய அதிபர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருக்கும் கோத்தபய ராஜபட்ச உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என அங்கிருக்கும் இலங்கை மக்கள் இணையம் வாயிலாக அந்நாட்டு அரசிற்கு கோரிக்கை விடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT