உலகம்

இலங்கை அதிபர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

DIN

இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தல் நிறைவடைந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபா் பதவியில் இருந்து கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டும் என்று மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றாா்.

இதனைத் தொடர்ந்து புதிய அதிபருக்கான தேர்தலில், இடைக்கால அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி எம்.பி. டலஸ் அழகம்பெரும, ஜனதா விமுக்தி பெரமுன தலைவா் அனுர குமார ஆகிய 3 போ் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில், இரண்டு எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை.

மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 223 பேர் வாக்களித்துள்ளனர். தொடர்ந்து, பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகின்றன. இன்னும் சற்று நேரத்தில் புதிய அதிபர் அறிவிக்கப்படவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT