'புதின் நலமாக இருக்கிறார்; வதந்திகளை நம்ப வேண்டாம்' - கிரெம்ளின்
ரஷிய அதிபர் புதின் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரஷியாவின் கிரெம்ளின் தகவல் தெரிவித்துள்ளது.
ரஷிய அதிபர் புதின் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரஷியாவின் கிரெம்ளின் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் மாதங்களைக் கடந்து தொடர்ந்து வருகிறது. உக்ரைனை முழுவதுமாக கைப்பற்றும் முயற்சியில் ரஷியா தீவிரமடைந்து வருகிறது. உக்ரைனும் ரஷியாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வருகிறது.
இதனிடையே ரஷிய அதிபர் விளாதிமீா் புதினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை இன்று வெளியிட்டுள்ள தகவலில், ரஷிய அதிபர் புதின் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
அதுபோல, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், 'கடந்த சில மாதங்களாக அதிபரின் உடல்நலம் குறித்து மேற்கு நாடுகளில் ஊகங்கள் இருந்து வருகின்றன. அந்த தகவல்கள் எல்லாம் உண்மையில்லை' என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | ’நேட்டோவில் இணைந்தால்..’ ஃபின்லாந்து, ஸ்வீடனுக்கு புதின் எச்சரிக்கை