உலகம்

ஸ்பெயினின் வெப்ப அலைக்கு 1,000 க்கும் மேற்பட்டோர் இறப்பு

DIN

மாட்ரிட் : கடந்த 10 நாள்களில் நாட்டின் பல பகுதிகளில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் தாண்டியதால், இந்த ஆண்டு இரண்டாவது வெப்ப அலையில் 1,047 பேர் இறந்ததாக ஸ்பெயினின் சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஸ்பெயினின் வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஹெர்வெல்லா கூறியதாவது: 

கடந்த 10 நாள்களில் நாட்டின் பல பகுதிகளில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் தாண்டியதால், இந்த ஆண்டு இரண்டாவது வெப்ப அலையில் 1,047 பேர் இறந்துள்ளனர். 

வயதானவர்களை பாதித்த கடுமையான வெப்பம்: பாதிக்கப்பட்டவர்களில் 672 பேர் 85 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், 241 பேர் 75 முதல் 84 வயதுக்கு உள்பட்டவர்கள், 88 பேர் 65 முதல் 74 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

வெப்ப அலைக்கு சுவாசம் மற்றும் இதய நோய்கள் உள்ளவர்களே அதிகயளவில் இறந்துள்ளனர். 

இளைஞர்களிடையே முழுமையாக எந்தவித பாதிப்பும் காணப்படவில்லை. ஆனால், அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் வயதானவர்களே என கூறினார். 

ஸ்பெயினின் முதல் வெப்ப அலை ஜூன் 11 அன்று தொடங்கி ஒரு வாரம் நீடித்தது. இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் தாண்டியதால் 829 பேர் வெப்பம் தொடர்பான காரணங்களால் இறந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT