முகப்பு
உலகம்

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவு

பிலிப்பின்ஸில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டது.

Updated On : 27 ஜூலை 2022, 12:03 pm IST
பகிர்:

பிலிப்பின்ஸில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டது.

வடக்கு பிலிப்பின்ஸ்ஸில் உள்ள அப்ரா மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு நிலவரப்படி இன்று புதன்கிழமை அதிகாலை பிலிப்பின்ஸின் அப்ரா மாகாணத்தின் முக்கிய நகரங்களிலும் தலைநகர் மணிலாவிலும் இந்நிலநடுக்கத்தின் அதிர்வை உணர முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.  

Advertisement

Advertisement

ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தினால் சில கட்டடங்கள் சேதாமாகின. உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

பிலிப்பின்ஸில் கடந்த 1990 ஆம் ஆண்டு பதிவான 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.