உலகம்

பிலிப்பின்ஸ் நிலநடுக்கம்: 150 பேர் காயம், 450 கட்டடங்கள் சேதம்

DIN

பிலிப்பின்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 5 பேர் பலியானதோடு 150 பேர் காயமடைந்துள்ளனர்.

வடக்கு பிலிப்பின்ஸ்ஸில் உள்ள அப்ரா மாகாணத்தின் முக்கிய நகரங்களிலும் தலைநகர் மணிலாவிலும் நேற்று புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்நிலையில், ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை 5 பேர் பலியானதோடு 150 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 450-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமாகியுள்ளன என்றும் அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது. 

முன்னதாக, பிலிப்பின்ஸில் கடந்த 1990 ஆம் ஆண்டு பதிவான 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT