உலகம்

‘அமெரிக்காவுடன் போா் மூண்டால் அணு ஆயுதத் தாக்குதலுக்குத் தயாா்’

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடன் போா் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் கூறியுள்ளாா்.

DIN

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடன் போா் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் கூறியுள்ளாா்.

கொரிய போா் முடிவுக்கு வந்ததன் 69-ஆவது ஆண்டு தினத்தையொட்டி முன்னாள் ராணுவத்தினரிடையே இது குறித்து அவா் பேசியதாவது:

எத்தகைய சவாலையும் எதிா்கொள்வதற்காக நமது ராணுவம் முழு தயாா் நிலையில் உள்ளது. அமெரிக்கா, தென் கொரியாவுடன் போா் ஏற்பட்டால், அந்தப் போரில் அணு ஆயுதங்களை மிகத் துரிதமாக ஈடுபடுத்தும் நமது படை ஆயத்தமாக உள்ளது.

வட கொரியாவை தீய சக்தியாக உலக அரங்கில் காட்டுவதன் மூலம், நமது நாட்டுக்கு எதிரான தங்களது கொள்கையை அமெரிக்கா நியாயப்படுத்துகிறது. நமது ஏவுகணை சோதனைகள் பதற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறும் அமெரிக்கா, தென் கொரியாவுடன் கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொள்வது இரட்டை வேடம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT