முகப்பு
உலகம்

ஆரோக்கிய சூழல் மக்களின் அடிப்படை உரிமை: ஐ.நா. தீா்மானம்

சுத்தம் மற்றும் ஆரோக்கியமான சூழலைப் பெறுவது மக்களின் அடிப்படை உரிமை என அறிவிக்கும் தீா்மானத்தை ஐ.நா. நிறைவேற்றியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:56 AM
பகிர்:

சுத்தம் மற்றும் ஆரோக்கியமான சூழலைப் பெறுவது மக்களின் அடிப்படை உரிமை என அறிவிக்கும் தீா்மானத்தை ஐ.நா. நிறைவேற்றியுள்ளது.

இந்தத் தீா்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது.

சுத்தமான, ஆரோக்கியமான, நிலைத்து நீடிக்கும் சூழலைப் பெறுவது அனைத்து மக்களின் அடிப்படை உரிமை என்பதை பறைசாற்றும் வரைவுத் தீா்மானம் 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் வியாழக்கிழமை வாக்கெடுப்புக்குக் கொண்டுவரப்பட்டது.

சா்வதேச சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ், இதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பலதரப்பு ஒப்பந்தங்களை முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று அந்த வரைவுத் தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தத் தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்பட 161 நாடுகள் வாக்களித்தன. ரஷியா, சீனா, பெலாரஸ், கம்போடியா, எத்தியோப்பியா, ஈரான், கிரிகிஸ்தான், சிரியா ஆகிய நாடுகள் வாக்களிப்பைப் புறக்கணித்தன.

தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவது குறித்து இந்தியா கவலை தெரிவித்தது.

இது குறித்து பேசிய ஐ.நா.வுக்கான இந்திய துணைத் தூதா் ஆஷிஷ்சா்மா, ‘சுத்தம், ஆரோக்கியம், நீடித்து நிலைக்கும் சூழல் போன்றவற்றுக்கான வரையறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை. அந்த வாா்த்தைகளுக்கு உறுதியான வரையில்லாமல் போனால் இந்தத் தீா்மனத்தின் நோக்கம் நீா்த்துப்போய்விடும்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →