உலகம்

மெக்ஸிகோ: பள்ளி மாணவர்கள் 5 பேர் சுட்டுக்கொலை

DIN

மெக்ஸிகோவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவைப்போல அதன் அண்டை நாடான மெக்ஸிகோவிலும் சமீப காலமாக துப்பாக்கிக் கலாச்சாரம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. 

இந்நிலையில் மத்திய மெக்ஸிகோவில் திங்கள்கிழமை இரவு சாலையில் நடந்து கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16-18 வயதுடைய 3 மாணவர்களும் 2 மாணவிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

மேலும், இத்தாக்குதலில் 65 வயதுடைய பெண்ணும் பலியானதாகவும் குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த மே மாதம் மெக்ஸிகோவின் குவானாஜுவாடோ பகுதியில் மதுமானக் கூடத்தில் நடைப்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT