உலகம்

பொருளாதார மீட்பு திட்டங்கள்: இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

DIN

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீா்வு காண்பதற்கான பல்வேறு செயல்திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான செயல்திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை கூடியது.

அதில், ரூ.12 கோடிக்கு (இலங்கை மதிப்பில்) மேல் ஆண்டு வருவாய் பெறும் நிறுவனங்களுக்கு 2.5 சதவீதம் சமூக பங்களிப்பு வரி விதிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்து, அதன் மூலம் எரிசக்தி பற்றக்குறையை சமாளிக்கும் விதமாக, அரசு ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கும் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT