முகப்பு
உலகம்

சூடான்: கப்பல் கவிழ்ந்ததில் 15,000 ஆடுகள் கடலில் மூழ்கி உயிரிழப்பு

சூடானில் கடல் பயணத்தின்போது கப்பல் கவிழ்ந்ததில் 15,000 ஆடுகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன.

Updated On : 14 ஜூன், 2022 at 3:26 PM
பகிர்:

சூடானில் கடல் பயணத்தின்போது கப்பல் கவிழ்ந்ததில் 15,000 ஆடுகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன.

சூடான் நாட்டின் சுவாகின் துறைமுகத்திலிருந்து சவுதி அரேபியாவிற்கு கப்பலில் 15,800 ஆடுகள் கொண்டு செல்லபட இருந்தன. 

இந்நிலையில், கப்பல் செங்கடலில் சென்று கொண்டிருந்தபோது  அதிக எடை காரணமாக திடீரென ஒருபக்கமாக கவிழ்ந்தது.

Advertisement

எதிர்பாராத இந்த விபத்தில் கப்பலிலிருந்த ஆடுகளில் 15,000 ஆடுகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன. நீண்ட நேர மீட்புப் பணியில் 780 ஆடுகள் மீட்கப்பட்டன.

9,000 ஆடுகளை மட்டுமே ஏற்றிச் செல்லும் கப்பலில் 15,800 ஆடுகளை ஏற்றியதே விபத்திற்குக் காரணம என கடற்கரை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.