கோப்புப்படம் 
உலகம்

ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் தேவை: ஸெலென்ஸ்கி

ரஷியாவின் தாக்குதலை சமாளிக்க ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் தேவை என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

DIN

ரஷியாவின் தாக்குதலை சமாளிக்க ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் தேவை என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷியாவுடான போரில் கடுமையான விளைவுகளையும், இழப்புகளையும் சந்தித்து வரும் உக்ரைன் சமீப நாள்களாக ஆயுதப் பற்றாக்குறை காரணமாக வலுவான எதிர் தாக்குதலைத் தர முடியாமல் திணறி வருகிறது. 

அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுதங்களையும் அதிநவீன ஏவுகணைகளையும் அனுப்பி வைத்தும் ரஷியாவிற்கு சரியான பதிலடி தர முடியவில்லை.

உக்ரைனின் பல பகுதிகளை ஆக்கிரமித்ததுடன் லுஹான்ஸ்க் பிராந்தியத்திலுள்ள சியெவெரோடொனட்க்ஸ் நகரை முழுமையாகக் கைப்பற்றுவதில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. தங்கள் நாட்டுப் படையினருக்கு உதவுவதற்காக, கூடுதல் படையினரையும் ரஷியா அனுப்பி வைத்துள்ளது.

மேலும்,  ரஷியாவின் தாக்குதலுக்கு தினமும் 100-லிருந்து 200 வீரர்களை இழந்து வருவதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியின் மூத்த உதவியாளர் மைக்காலோ போடோலியாக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சியெவெரோடொனட்க்ஸ் மற்றும் கார்கிவ் நகரில் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க தங்களுக்கு ஏவுகணை எதிர்ப்பு ஆயுதம் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர்  வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஆதரவு நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT