இலங்கையில் பரிதாபம்: பெட்ரோல் வாங்க வரிசையில் நின்ற ஆட்டோ ஓட்டுநர் பலி 
உலகம்

இலங்கையில் பரிதாபம்: பெட்ரோல் வாங்க வரிசையில் நின்ற ஆட்டோ ஓட்டுநர் பலி

கடுமையான பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கையில், எரிபொருள் தட்டுப்பாட்டால் பெட்ரோல் வாங்க நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

DIN


கொழும்பு: கடுமையான பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கையில், எரிபொருள் தட்டுப்பாட்டால் பெட்ரோல் வாங்க நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

கொழும்புவின் புறநகர்ப் பகுதியில் இரவு முழுக்க பெட்ரோல் வாங்க மிக நீண்ட நெடிய வரிசையில் காத்திருந்த 53 வயதான ஆட்டோ ஓட்டுநர் மாரடைப்பால் இன்று காலை மரணமடைந்தார். எரிபொருள் தட்டுப்பாட்டால் அண்மையில் பலியான நபராக இவர் உள்ளார்.

ஏற்கனவே இலங்கையில் டீசல் முற்றிலும் காலியாகி விற்பனை நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பெட்ரோல் நிலையங்களில் இரண்டு நாள்களுக்கும் மேலாக பலரும் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டுச் சென்றுவிடுகின்றனர்.

மாரடைப்பால் மரணமடைந்த ஆட்டோ ஓட்டுநர், புதன்கிழமை இரவு முதல் தெற்கு கொழும்புவின் புறநகரான பானதுராவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் காத்திருந்துள்ளார். அவர் வரிசையில் காத்திருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு ஆட்டோவுக்குள்ளேயே மரணமடைந்தார்.

இலங்கையில் எரிபொருள் வாங்குவதற்கான வரிசையில் காத்திருக்கும் போது உயிரிழப்பு ஏற்படுவது ஒன்றும் அங்கு புதிதில்லை.  ஏற்கனவே சில உயிரிழப்புகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா் தற்கொலை

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூவா் மீது வழக்கு

ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

அசோக் லேலண்ட் விற்பனை 8% உயா்வு

SCROLL FOR NEXT