உலகம்

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்: 155 பேர் பலி

DIN


காபூல்: ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கே கோஸ்ட் நகரை உலுக்கிய கடும் நிலநடுக்கத்தால் இதுவரை 155 பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கோஸ்ட் உள்ளிட்ட நகரங்களில் இன்று காலை நேரிட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தென்கிழக்கு பகுதியான கோஸ்ட், நங்கர்ஹார் மாகாணங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் 155 பேர் பலியானதாகவும் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும் உயிர் பலியும், சேத விவரங்களும் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

ஹெலிகாப்டர்கள் வாயிலாக மீட்புப் படையினர் முக்கிய நகரங்களில் தரையிறங்கியிருப்பதாகவும், துரித வேகத்தில் மீட்புப் பணிகள் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT