உலகம்

குரங்கு அம்மை நோயை அவசரநிலையாக அறிவித்த  உலக சுகாதார நிறுவனம்!

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், குரங்கு அம்மை நோய் பரவுவது அசாதாரணமானது மற்றும் கவலைக்குரியது என்று கூறினார்.

DIN

லண்டன்: குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. குரங்கு அம்மை பரவல் உலகளாவிய அவசரநிலையாக அறிவிக்கப்பட வேண்டுமா  என்பதை பரிசீலிக்க உலக சுகாதார அமைப்பானது, தனது அவசரக் குழுவை வியாழக்கிழமை கூட்டியது.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், குரங்கு அம்மை நோய் பரவுவது அசாதாரணமானது மற்றும் கவலைக்குரியது என்று கூறினார்.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

குரங்கு அம்மை நோயை உலகளாவிய அவசரநிலையாக  அறிவிப்பதன் நோக்கம், குரங்கு அம்மை நோய் இன்னும் அதிகமான நாடுகளுக்கு பரவும் அபாயத்தில் உள்ளது. இத்தகைய அறிவிப்பு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.

தற்போது உள்ள சூழ்நிலையில் சமூக பரவலாக மாறினால், தொற்றின் வேகம் அதிகரித்து  குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

சமூகப் பரவலாக மாறினால் நடவடிக்கைகள் துரிதமாக எடுக்க வேண்டும். இந்த நோயால் குறைந்த அளவு பாதிப்பு ஏற்படுவதை உறுதி செய்வதற்காகவே அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

SCROLL FOR NEXT