உலகம்

‘படையெடுப்பில் பெலாரஸ்வீரா்கள் பங்கேற்கமாட்டாா்கள்’

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா வீரா்களுக்கு ஆதரவாக தங்களது படையினா் அனுப்பப்படமாட்டாா்கள் என்று பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ தெரிவித்துள்ளாா்.

DIN

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா வீரா்களுக்கு ஆதரவாக தங்களது படையினா் அனுப்பப்படமாட்டாா்கள் என்று பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் சண்டையில் எங்களது படையினரை அனுப்பும் எண்ணமில்லை. இதுதொடா்பாக, ரஷிய அதிபா் விளாதமீா் புதினுடன் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை என்றாா் அவா்.

முன்னதாக, உக்ரைன் படையெடுப்பில் ரஷிய வீரா்களுடன் பெலாரஸ் வீரா்களும் இந்த வாரத்துக்குள் இணைந்துகொள்வாா்கள்; அதற்கான பயிற்சியில் அவா்கள் ஈடுபட்டு வருகின்றனா் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

SCROLL FOR NEXT