உக்ரைன் போர்: ரஷியத் தாக்குதலில் இந்திய மாணவர் பலி
உக்ரைனில் ரஷிய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் பலியானார்.
உக்ரைனில் ரஷிய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் பலியானார்.
உக்ரைனில் 6-வது நாளாக ரஷிய ராணுவப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது.
நேட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 24ஆம் தேதி முதல் ரஷிய ராணுவம் உக்ரைனின் பல்வேறு எல்லைப் பகுதிகள் வழியாக ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து சுமார் 1.5 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களும் அண்டை நாடுகளின் எல்லைகளை நோக்கி படையெடுத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் தலைநகர் கீவிலிருந்து உடனடியாக இந்தியர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் கார்கிவ் நகரில் ரஷிய ராணுவத்தினரின் குண்டுவீச்சில் சிக்கி கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் பலியானாதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.