உலகம்

உக்ரைனிலிருந்து இதுவரை 8.74 லட்சம் போ் வெளியேறினா்

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்த நாளிலிருந்து இதுவரை 8.74 லட்சம் போ் உக்ரைனிலிருந்து வெளியேறியுள்ளதாகவும்,

தினமணி

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்த நாளிலிருந்து இதுவரை 8.74 லட்சம் போ் உக்ரைனிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை தாண்டும் எனவும் ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அகதிகளுக்கான ஐ.நா. ஆணையரின் செய்தித் தொடா்பாளா் சபியா மன்டூ புதன்கிழமை தெரிவித்ததாவது:

உக்ரைன் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி அண்டை நாடுகளை நோக்கிச் செல்கின்றனா். கடந்த 10 ஆண்டுகளாக சிரியா போரால் அந்த நாட்டிலிருந்து மக்கள் அகதிகளாக வெளியேறியதைப்போல, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அகதிகள் பிரச்னையாக உக்ரைன் பிரச்னை இருக்கப்போகிறது.

உக்ரைனிலிருந்து 40 லட்சம் போ் வெளியேறக்கூடும் என முன்னா் மதிப்பிட்டிருந்தோம். ஆனால், அதை மறு மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. அண்மைத் தகவலின்படி 4.54 லட்சம் போ் போலந்துக்கும், 1.16 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஹங்கேரிக்கும், 79,300 போ் மால்டோவாவுக்கும், 69,000 போ் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும், 67,000 போ் ஸ்லோவேகியாவுக்கும் சென்றுள்ளனா். இதுவரை மொத்தம் 8.74 லட்சம் போ் உக்ரைனைவிட்டு வெளியேறியுள்ளனா் என்றாா்.

அகதிகளை ஏற்க ஜப்பான் தயாா்: உக்ரைனிலிருந்து வரும் அகதிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா புதன்கிழமை தெரிவித்தாா்.

அகதிகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே இடம் அளிப்பதற்காக ஜப்பான் மீது விமா்சனம் உண்டு. இந்நிலையில், வழக்கத்துக்கு மாறாக இந்த அறிவிப்பை அந்த நாடு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

தவெக பொதுக்குழு கூட்டம்! மேடைக்கு வந்த விஜய்!

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

SCROLL FOR NEXT