ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக படையெடுப்பை தள்ளிபோட சொன்னதா சீனா? உண்மை என்ன?
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்கும் என மேற்குலக நாடுகள் தொடர்ந்து எச்சரித்துவந்தாலும் சீன அரசு ஊடகம் இதை மறுத்துவந்தது. குறிப்பாக, உக்ரைனில் உள்ள சீனர்களை மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் முடியும் வரை, உக்ரைன் மீது படையெடுக்க வேண்டாம் என ரஷியாவிடம் கோரிக்கை விடுத்ததாக வெளியான செய்திக்கு சீனா இன்று மறுப்பு தெரிவித்துள்ளது. ரஷியாவின் ராணுவ நடவடிக்கைக்கு சர்வதேச சமூகம் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையிலும் கூட சீன, ரஷிய நாடுகளுக்கிடையே நல்ல உறவே நீடித்துவருகிறது.
இருப்பினும், ரஷ்யாவின் செயல்பாடுகளை சீனா எச்சரிக்கையுடன் கையாண்டு வருகிறது. கடந்த மாதம் சீன அதிபர் ஷி ஜிங்பிங், ரஷிய அதிபர் புதினை சந்தித்தார். அப்போது, ஒருவருக்கொருவர் எல்லையற்ற ஆதரவு தர இரு நாட்டு தலைவர்களும் ஒப்பு கொண்டனர்.
இதற்கு மத்தியில், உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவை சீனா கண்டிக்கவில்லை. ஆனால், வெளிப்படையான ஆதரவும் தரவில்லை. இதனிடையே, பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் முடியும் வரை, உக்ரைன் மீது படையெடுக்க வேண்டாம் என ரஷிய அலுவலர்களிடம் சீன அலுவலர்கள் கேட்டு கொண்டனர் என அமெரிக்க அலுவலர்கள் கூறியுள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
Advertisement
அதுமட்டுமின்றி, ரஷியா போர் தொடுக்கப்போவதற்கு முன்பே சீனாவுக்கு இதுகுறித்து தெரியும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து நான்கு நாள்கள் கழித்தே உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென் பின் கூறுகையில், "நியூயார்க் டைம்ஸ் செய்தி முற்றிலும் பொய்யான செய்தி. இந்த வகையான திசை திருப்பும் கருத்துக்கள் முற்றிலும் வெறுக்கத்தக்கவை. பழியை போடும் தன்மை கொண்டது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்கும் என மேற்குலக நாடுகள் தொடர்ந்து எச்சரித்துவந்தாலும் சீன அரசு ஊடகம் இதை மறுத்துவந்தது. குறிப்பாக, உக்ரைனில் உள்ள சீனர்களை மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில், புதினை தவிர்த்து ஜி ஜின்பிங்கை வேறு எந்த உலக தலைவரும் சந்திக்கவில்லை. பெய்ஜிங்கில் நடைபெற்ற மழைக்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் விருந்தினராக புதின் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.