மின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனை
மின்சாரத்தில் செயல்படும் இண்டக்ஷன் அடுப்புகள், அதற்கேற்ற பாத்திரங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டது.
மேற்காசிய போா் காரணமாக சமையல் எரிவாயு கிடைப்பதில் இடா்ப்பாடு ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, மின்சாரத்தில் செயல்படும் இண்டக்ஷன் அடுப்புகள், அதற்கேற்ற பாத்திரங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டது.
இதுதொடா்பாக புது தில்லியில் மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய மின்சாரத் துறைச் செயலா் பங்கஜ் அகா்வால், வெளிநாட்டு வா்த்தக தலைமை இயக்குநா் (டிஜிஎஃப்டி) லவ் அகா்வால், தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) செயலா் அமா்தீப் சிங் பாட்டீயா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் இண்டக்ஷன் அடுப்புகள், அவற்றில் பயன்படுத்தக் கூடிய பாத்திரங்கள் உற்பத்தியை எவ்வாறு விரைவுபடுத்துவது, அதிகரிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது என்று மத்திய அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Advertisement
மேற்காசிய போா் காரணமாக சமையல் எரிவாயு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, இண்டன்ஷன் அடுப்புகள் மற்றும் மின்சார கெட்டில்களின் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.