சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுடனான உறவு துண்டிப்பு: ரஷியா அறிவிப்பு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுக்கு வழங்கும் ஒத்துழைப்பை நிறுத்திக்கொள்வதாக ரஷியா அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவுக்கு ராக்கெட் எஞ்சின்கள் வழங்குவதையும் நிறுத்துவதாகக் கூறியுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுக்கு வழங்கும் ஒத்துழைப்பை நிறுத்திக்கொள்வதாக ரஷியா அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவுக்கு ராக்கெட் எஞ்சின்கள் வழங்குவதையும் நிறுத்துவதாகக் கூறியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் போர்த் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து ரஷிய ராணுவம் முன்னேறி வருகிறது. ரஷியாவின் தாக்குதலில் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.
அதேபோன்று ரஷியா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்து வருகின்றன.
இதற்கு பதிலடியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுக்கு வழங்கும் ஒத்துழைப்பை நிறுத்திக்கொள்வதாக ரஷியா அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு ராக்கெட் எஞ்சின்கள் வழங்குவதை நிறுத்துவதாகவும் ரஷியா அறிவித்துள்ளது.
இதனால் சர்வதேச விண்வெளி மைய ஆய்வகள் முடங்கும் என சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | உக்ரைனை ரஷியா தாக்குவதன் உள்(ள)நோக்கம் என்ன? அலசல் ரிப்போர்ட்!